நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் - 19 நாட்களில் SIR உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம்!
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் – 19 நாட்களில் SIR உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம்!

Murugesan M by Murugesan M
Dec 19, 2025, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடந்த 19 நாட்களாகப் பரபரப்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. கடந்த 19 நாட்களாக வந்தே பாரதம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள்குறித்து இரு அவைகளும் விவாதித்தன.

மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்திற்கு மாற்றாக ‘விபி ஜி ராம் ஜி’ மசோதா, அணுசக்தி துறையில், 100 சதவீத தனியார் முதலீட்டை அனுமதிக்கும் ‘சாந்தி’ மசோதா, முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பங்குச்சந்தை விதிகள் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இன்று இரு அவைகளும் கூடிய நிலையில்,  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேநீர் விருந்து அளித்தார். சபாநாயகர் அறையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சி சார்பில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, திமுக சார்பில் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அமளியும் கூச்சலும் நிறைந்த அவைக் கூட்டங்களுக்குப் பிறகு, இருதரப்பு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கலந்துரையாடியது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, நீண்ட காலத்திற்குப் பிறகு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து உரையாடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags: parlimentWinter session of Parliament concludes - 19 days of debate on issues including SIR
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில் 4 பேர் விஷம் குடித்து தற்கொலை!

Next Post

திருவள்ளூர் : சிலிண்டர் வெடிப்பு – இடிந்து விழுந்த வீடு!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies