கரூர் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில் காரில் வந்து ஆடுகளை திருடிய இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அய்யம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு காரில் வந்த 4 பேர், பட்டியில் இருந்த ஆடுகள் மற்றும் பிள்ளையார் கோயில் உண்டியலை திருட முயற்சித்துள்ளனர்.
சத்தம்கேட்டு வந்த பொதுமக்கள், காரில் வந்த 4 பேரில் விக்னேஷ், பெரியமருது ஆகியோரை சுற்றிவளைத்து மரத்தில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
மேலும், காரில் தப்பியோடிய இரண்டு பேரை போலீசார் தேடி வரும் நிலையில், ஆடு திருடும்போது பிடிப்பட்ட இளைஞர்கள் மரத்தில் கட்டி வைக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானது.
















