அமெரிக்காவின் நியூயார்க்கில் பனியில் சிக்கி தவித்த மானை தீயணைப்பு வீரர்கள் மீட்ட வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.
காலநிலை மாற்றம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
திரும்பும் திசையெல்லாம் பனி படர்ந்து வெண்போர்வை போர்த்தியது போல் காட்சியளிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழே சென்றதால் கடும் குளிர் நிலவி வருகிறது. பல பகுதிகளிலும் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகக் காட்சியளிக்கிறது.
அந்த வகையில் இதாகா நகரில் நிலவும் கடுங்குளிரால் ஆறுகள் கூட உறைந்து காணப்படுகின்றன.
இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய மான் பனியில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மானை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் தீயணைப்பு வீரர்களைபலரும் பாராட்டி வருகின்றனர்.
















