கொலம்பியாவில் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஏற்பட்ட மோதலால் கால்பந்து மைதானம் போர்களம் போல் காட்சியளித்தது.
கொலம்பிய கோப்பை இறுதிப்போட்டி மெடலின் நகரில் உள்ள எஸ்டாடியோ அட்டான்சியோ கிரார்டொட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அட்லெட்டிகோ நேஷனல் மற்றும் டிஐஎம் அணிகள் மோதிய நிலையில் டிஐஎம் அணியை அட்லெட்டிகோ நேஷனல் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.
இதையடுது்து அட்லெட்டிகோ நேஷனல் அணியினர் மைதானத்தில் கோப்பையுடன் அணிவகுப்பு நடத்தியபோது டிஐஎம் அணியின் ரசிகர்கள், தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தால் கால்பந்தாட்ட மைதானம் போர்களம்போல் காட்சியளித்தது.
















