கட்சி தலைமையில் இருந்து அறிவிப்பு வரும் வரை நானே முதலமைச்சராக தொடருவேன் என சித்தராமைய்யா திட்டவட்டமாக தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்தே யார் முதல்வர் என சித்தராமைய்யா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இதனை தொடர்ந்து சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகளும், சிவக்குமார் இரண்டரை ஆண்டுகளும் முதலமைச்சராக இருக்கலாம் என கட்சி தலைமை முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி முதலமைச்சராக நியமிக்கப்பட்ட சித்தராமைய்யா இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தனது பதவியில் நீடித்து வருகிறார். இது தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தில் எம்.எல்.ஏ அசோகா கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சித்தராமைய்யா , பதவிக்காலத்தை முழமையாக நிறைவு செய்ய தலைமை அனுமதிக்கு என நம்புவதாக தெரிவித்தார். காங்கிரஸ் தலைமை என் பக்கம் தான் உள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் சித்தராமையா உறுதி அளித்தார். இந்த பதில் துணை முதலமைச்சர் சிவக்குமாரின் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
















