இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் 4வது ஆண்டாகத் தொடர்ந்து தமிழகமே முதலிடம் வகித்து வருவது வேதனையளிப்பதாகப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் அதிக கடன் தொகை வாங்கிய மாநிலங்கள் பட்டியலிலும், அதிக வட்டி செலுத்தும் பட்டியலிலும் தமிழகமே முதலிடம் வகித்து வருவது வேதனைக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தின் நிதி மேலாண்மையை திமுக அரசு சிதைத்து வருவது வருத்ததிற்குரியது எனத் தெரிவித்துள்ள அன்புமணி 2024-25ம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ.9 லட்சத்து 55 ஆயிரத்து 690 கோடியாக உயர்ந்திருக்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலுர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 55 மாதங்களாக மக்களுக்கு வேதனைகளை மட்டுமே பரிசாக அளித்து வரும் திமுகவின் ஆட்சி ஒரு மாநிலத்தின் நிதி நிர்வாகம் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான முழு எடுத்துக்காட்டு எனவும் விமர்சித்துள்ளார்.
















