சென்னை அண்ணா சாலையில் உள்ள BSNL அலுவலகத்தில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது.
அண்ணாசாலையில் செயல்பட்டுவரும் BSNL அலுவலகத்திற்கு வழக்கம்போலப் பணிக்குச் சென்ற ஊழியர்கள், கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இரண்டாவது தளத்தில் இருந்து 3, 4-வது தளம் வரை தீ பரவியதால் அங்கிருந்த மின் சாதனங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தீவிபத்து காரணமாக மின் கட்டணம் செலுத்துதல், மின்னகத்தில் புகார் அளிக்கும் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேவையில் ஏற்பட்டுள்ள தற்காலிக பாதிப்பு விரைவில் சீரடையும் என TANGEDCO விளக்கம் அளித்துள்ளது.
















