சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவிற்கு ஏஞ்சல் ஆடையுடன் மிடுக்காகச் சென்ற 6 வயது சிறுமி, மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரையை சேர்ந்த இளங்கோ, பவானி தம்பதியரின் 6 வயது மகள் தேஜாஸ்ரீ, தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கலைநிகழ்ச்சிக்காகச் சிறுமி தேஜாஸ்ரீ ஏஞ்சலாக நடிக்க இருந்தார். அப்போது, தேஜாஸ்ரீ திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக ஆசிரியர்கள் அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய், குழந்தையின் உடலை பார்த்துக் கதறி அழுத சம்பவம், அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
















