மீஞ்சூரில் கணித பாடம் சரியாகப் படிக்காததால் 10 வயது சிறுமியைத் தனியார் பள்ளித் தாளாளரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அனுப்பம்பட்டு சியோன் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில், 5-ஆம் வகுப்பு பயின்று வரும் 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கணிதப் பாடத்தில் சிறுமி சரியாகப் படிக்கவில்லை என்ற காரணத்திற்காக, பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளரான அருள்தாஸ், சிறுமி என்றும் பாராமல் மிகக் கொடூரமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
















