கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேசத்தில் அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் அருகே உள்ள சராய் தரின் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.
அலங்கார மற்றும் கைவினை பொருட்களின் தயாரிப்பே இவர்களின் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. இங்குத் தயார் செய்யப்படும் பொருட்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் நடவடிக்கைகளாலே தங்களின் தயாரிப்புகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















