சென்னை வருகை தந்த பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாஜகவின் புதிய தேசிய செயல் தலைவராகப் பதவியேற்ற நிதின் நபின், பதவியேற்புக்கு பிறகு முதன்முறையாகச் சென்னை வருகை தந்தார்.
2 நாள் பயணமாகச் சென்னை வந்துள்ள அவருக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதேபோல, புதுச்சேரி பாஜக நிர்வாகிகளும், நிதின் நபினை வரவேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், புதிய தேசிய செயல் தலைவரின் வருகை முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுவதாக கூறினார். தமிழகம், புதுச்சேரியில் NDA கூட்டணி நிச்சயம் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சென்ற பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினுக்கு, வழி நெடுகிலும் பூக்களைத் தூவி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்களை கண்டு கை அசைத்தபடி நிதின் நபின் வாகனத்தில் பயணித்தார். நிகழ்வின்போது, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
















