திருப்பரங்குன்றத்தில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது காவல்துறை அத்துமீறல் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து காவல்துறைகள் தடுப்பது அதிகரித்து வருகிறது. நேற்று இஸ்லாமியர்கள் மலை மேல் அனுமதித்ததை கண்டித்து பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதனை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாள்ரகளைஉங்களால் தான் பிரச்சனை என ஒரு தரப்புக்கு ஆதரவாக பேசும் திருப்பரங்குன்றம் கோயில் ஆய்வாளர் ராஜசேகர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை இன்று காலை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போது செல்போனை பறித்த போலீசார், அந்த வீடியோவை டெலிட் செய்து விடுவித்தனர். இதனையடுத்து போலீசாருக்கும் பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
















