புதுச்சேரியில் நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்றார்.
உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக வைக்கும் நோக்கில் மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கடற்கரை சாலையில் தொடங்கிய இந்த பேரணி அண்ணா சாலையில் தொடங்கி மறைமலை அடிகள் சாலை வழியாக மீண்டும் கடற்கரை சாலைக்கு வந்தடைந்தது.
மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் கர்லா சுற்றுதல், ஸ்கிப்பிங் , சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
















