நாடு முழுவதும் வரும் 26ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை மாற்றி அமைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, முன்பதிவில்லாத சாதாரண வகுப்பில், 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்போருக்கு கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், 215 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஏசி, ஏசி இல்லாத வகுப்பில் பயணிப்போருக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஏசி இல்லாத பெட்டிகளில் 500 கிலோ மீட்டர் பயணத்திற்கு, பயணிகள் 10 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்றும். சாதாரண வகுப்பில், 215 கிலோ மீட்டர் வரை பயணிப்போருக்கு கட்டண உயர்வு ஏதும் கிடையாது என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், புறநகர் ரயில் சேவைகளில் கட்டணம் உயர்வு இல்லை எனவும், சீசன் டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் உயர்வு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வால் இந்த ஆண்டில் கூடுதலாக 600 கோடி வருவாய் கிடைக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
















