சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 100 வயதுடைய முதியவர் ஒருவர் நீளம் தாண்டுதல், தடகள போட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்று அசத்தினார்.
அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான மூத்தோர் தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த முதியவர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் தஞ்சையை சேர்ந்த நாடிமுத்து என்ற 100 வயது விவசாயி பங்கேற்று அசத்தினார்.
இவர் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்டவற்றில் பங்கேற்றார். இவரை கண்டு வியப்படைந்த பலரும் நாடிமுத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
















