வெனிசுலாவுடன் போர்? : கிராஃபைட் குண்டு வீச தயாராகும் அமெரிக்கா!
Sep 10, 2026, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வெனிசுலாவுடன் போர்? : கிராஃபைட் குண்டு வீச தயாராகும் அமெரிக்கா!

Murugesan M by Murugesan M
Dec 21, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெனிசுலாவுடனான போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கப் பயன்படுத்தும் முதல்ஆயுதம் கிராஃபைட் குண்டாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்கா அவரைக் கைது செய்யப் உதவுபவர்களுக்கு சுமார் 488 கோடி ரூபாய் சன்மானமும் அறிவித்துள்ளது. கரீபியன் கடலில் வெனிசுலாவுக்கு அருகே தனது கடற்படையைக் குவித்துள்ள அமெரிக்கா கடந்த செப்டம்பர் முதல் அப்பகுதியில் அமெரிக்கா நடத்திய 28 தாக்குதல்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

சமீபத்தில் வெனிசுலாவில் இருந்து எண்ணெயை ஏற்றிவந்த ஸ்கிப்பர் என்ற பெரிய எண்ணெய் கப்பலை அமெரிக்ககடற்படை உதவியுடன் அந்நாட்டு கடலோர காவல்படை கைப்பற்றியது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்கொள்ளை என்று வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே பொருளாதார தடை விதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்களை வெனிசுலாவுக்கு செல்லவிடாமல் முற்றுகை யிட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம், மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் கரீபியன் கடற்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்படி வெனிசுலா மீது போர் தொடுக்கும் அமெரிக்கா முதல் ஆயுதமாக கிராஃபைட் குண்டுகளைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கிராஃபைட் குண்டு ஒரு சாதாரண குண்டு போல வெடிக்காத ஒரு சிறப்பு ஆயுதமாகும். இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளின் மின்சார உள்கட்டமைப்பை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் குண்டு கார்பனின் மிகச் சிறிய இழைகளை காற்றில் பரப்புகிறது. இந்தச் சிறிய இழைகள் மின் கம்பிகள், மின்மாற்றிகள் அல்லது மின் நிலையங்கள் போன்றவற்றின் மீது விழுகின்றன.

கிராஃபைட் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், இந்த இழைகள் மின் சாதனங்களைத் தொடும்போது மின்கசிவை ஏற்படுத்துகின்றன. இது மின் அமைப்பைச் செயலிழக்கச் செய்து, மின்சாரத்தை முழுமையாகத் துண்டித்து விடுகிறது. ஒரு துறைமுகத்தின் மீது வீசப்படும் கிராஃபைட் குண்டு பல்லாயிரக்கணக்கான கொள்கலன்களை ஒரே இடத்தில் முடக்கி, முக்கியமான வர்த்தகப் பாதைகளை ஒரே நொடியில் செயலிழக்க வைக்கும். நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு அவசியமான ஏடிஎம்கள் வங்கிகள் மருத்துவமனைகள், குடிநீர் அமைப்புகள் மற்றும் அதிவேக ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு மின் தடைகளை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையை முடக்கும். 1991 வளைகுடாப் போரின் போது, ​​அமெரிக்கா கிராஃபைட் குண்டுகளைப் பயன்படுத்தி, குறைந்தபட்ச மக்கள் பலியுடன் ஈராக்கின் மின் கட்டமைப்பில் சுமார் 70 சதவீதத்தை செயலிழக்கச் செய்தது.

1999 கொசோவோ போரின் போது வான்வழித் தாக்குதல்களை எதிர்க்கும் செர்பியாவின் திறனைக் குறைப்பதற்காகஅதன் மின் உள்கட்டமைப்பின் மீது கிராஃபைட் குண்டுகளை நேட்டோ படைகள் பயன்படுத்தியது. வெனிசுலாவின் மின்சார உள்கட்டமைப்பு “Achilles heel” என்ற தனித்துவமான கட்டமைப்பாகும். நாட்டின் மொத்த மின்சாரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் கூரி அணையில் உள்ள Simón Bolívar Hydroelectric Plant சிமோன் பொலிவார் நீர்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப் படுகிறது. அமெரிக்கா இந்த அணையைக் கூடத் தாக்க வேண்டியதில்லை.

San Geronimo B substation, சான் ஜெரோனிமோ பி துணை மின்நிலையதையை தாக்கினாலே போதுமானது. நாடு முழுவதும் ஒரே நொடியில் மின்சாரத்தைத் துண்டித்து விடமுடியும். நேரடி இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு வெனிசுலாவின் வான் பாதுகாப்புகளை முதலில் செயலிழக்கச் செய்வதுடன் S-300VM ரேடார் வலைப்பின்னல்கள் மற்றும் இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்,ஆகியவற்றை செயலிழக்க வைப்பதே கிராஃபைட் குண்டு வீசுவதன் நோக்கமாகும். 2,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுகளையோ ஏவுகணைகளையோ வீசி மின் நிலையத்தைத் தாக்காமல், மின்சார உள் கட்டமைப்புகளை நிரந்தரமாக அழிக்கும் கிராஃபைட் குண்டு ஒரு மென்மையான ஆயுதமாகக் கருதப்படுகிறது.

Tags: usaDonald TrumpAmerica-Venezuela war?: America preparing to drop graphite bombs
Share
Tweet
SendShare
Previous Post

100 வயதில் தடகள போட்டி – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்!

Next Post

ஆந்திராவில் ரயிலில் இருந்து குதித்து தம்பதி தற்கொலை – இறுதியாக சண்டை போட்ட வீடியோ வெளியானது!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies