மதச்சார்பின்மை எனும் திமுக அரசின் இரட்டை வேடத்திற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், சந்தனக்கூடு திருவிழாவிற்கு மட்டும் அனுமதித்த திமுக அரசின் போலி மதச்சார்பின்மை தெளிவாக வெளிப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
தர்காவில் கொடி ஏற்ற மட்டும் அனைவரையும் அனுமதிப்பதுதான் திமுக அரசின் சமத்துவமா? என கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன்,
திமுக அரசுக்கு எதிர்குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களின் கேள்விகள் வெறும் தொடக்கப்புள்ளியே எனவும் கூறியுள்ளார்.
மேலும், போலி மதச்சார்பின்மைவாத திமுக அரசை தமிழக மக்கள் விரட்டியடிக்கும் நாள் வெகுதூரமில்லை எனவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
















