மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி கைப்பற்றியது.
மகாராஷ்டிராவில் உள்ள 246 நகராட்சி, 42 நகர் பஞ்சாயத்துகளுக்கு கடந்த டிசம்பர் 2 மற்றும் 20-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாஜக, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. 288 இடங்களில் 207 இடங்களை கைப்பற்றியது மகாயுதி கூட்டணி கைப்பற்றியுள்ளது. மகா விகாஸ் அகாடி கூட்டணி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கிடையே, மராட்டியத்தின் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு அயராது பாடுபட்ட மகாயுதி கூட்டணியினரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மராட்டியம் வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளாட்சி தேர்தலில் பாஜக மற்றும் மகாயுதி கூட்டணிக்கு ஆதவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது பாஜக-வின் தொலைநோக்கு பார்வையின் மீதான மக்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















