மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு எதிர்ப்பை மீறி கொடிமரம் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை கொதிப்படைய செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாத நிலையில், சந்தனக்கூடு திருவிழாவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது அப்பகுதி மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கிடையே சிக்கந்தர் தர்காவுக்கு கோட்டை வாசல் வழியாக, சந்தணக்கூடு நிகழ்ச்சிக்கான கொடிமரத்தை இஸ்லாமியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்றனர்.
இதனால் கொதிப்படைந்த மக்கள் கொடிமரம் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு மட்டும் கட்டுப்பாடின்றி அனுமதி வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
















