கணித மேதை சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அமெரிக்காவை சேர்ந்த முனைவருக்கு பரிசு வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சீனிவாச ராமானுஜத்தின் பிறந்த நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
15வது ஆண்டாக நடத்தப்படும் இந்த விழாவில் சர்வதேச அளவில் கணிதத்தில் சிறந்து விளங்கும் 32 நபர்களை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
இதில் அமெரிக்காவை சேர்ந்த முனைவர் அலெக்ஸாண்டர் ஸ்மித் என்பவருக்கு 10 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
















