தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கி 6088 கோடி ரூபாயை பாஜக வசூலித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தேர்தல் நன்கொடை பத்திரங்கள் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து நன்கொடையை வசூலிக்க மாற்று வழியை யோசித்த பாஜக, தேர்தல் அறக்கட்டளைகளை உருவாக்கியது.
அதன் மூலம் 2024- 2025ம் ஆண்டில் பாஜக வசூலித்த தேர்தல் நிதி 6088 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2023-2024ம் ஆண்டில் வசூலித்த 3967 கோடி ரூபாயை காட்டிலும் 53 சதவீதம் அதிகம் ஆகும்.
இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் நன்கொடை பெற்ற கட்சிகளில் பட்டியலில் பாஜக முதலிடத்தை பிடித்துள்ளது.
















