மக்களுக்கு நல்லது செய்ய எதற்கு அரசியலுக்கு வர வேண்டும் என்றும், நடிகராக இருந்து கொண்டே நல்லது செய்யலாம் எனவும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் வரும் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியாகவுள்ள “45:தி மூவி” திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவராஜ்குமார், உபேந்திரா, விஜய் ஆண்டனி, வின்சன்ட் அசோகன், இயக்குநர் அர்ஜுன் ஜன்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் விழாவில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கத் தனக்கு வாய்ப்பு கிடைத்தது என்றும், ஆனால் தம்மால் நடிக்க முடியாமல் போனது எனவும் கூறினார்.
மேலும், மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்குதான் வரவேண்டியதில்லை என்றும், நடிகராக இருந்து கொண்டே பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் உதவி செய்யலாம் எனவும் நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
















