தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகை சமந்தா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.
ஹைதராபாத்தில் நகை கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை சமந்தாவை காண ஏராளமான ரசிகர்கள் கூடினர்.
அப்போது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுக்க முயன்றதால் சமந்தா ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து சமந்தாவை பத்திரமாக மீட்டப் பாதுகாவலர்கள் அவரை காரில் அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
















