வங்கதேசத்தில் அண்மையில் அடித்துக்கொல்லப்பட்ட இந்து இளைஞர், மதவெறுப்பை பரப்பியதற்கு ஆதாரம் இல்லை என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக, பல்வேறு நகரங்களில் கலவரம் வெடித்தது.
அதைப் பயன்படுத்திய ஒரு கும்பல், மதவெறுப்பை பரப்பியதாகக் கூறி மைமென்சிங் மாவட்டத்தை சேர்ந்த இந்து இளைஞரான திபு சந்திர தாஸை அடித்துக் கொன்றது.
அதைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் அவரது உடல் தீயிட்டு எரிக்கப்பட்டது. கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட திபு சந்திர தாஸ், மத வெறுப்பில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் காவல்துறை உயர் அதிகாரி சம்சுஜமான் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கொலை செய்யப்படுவதற்கு முன்னதாக, திபு சந்திர தாஸிடம், சில நபர்கள் உரையாடுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அதில், காவல்துறையை போல உடையணிந்த நபர்களிடம், திபு சந்திர தாஸ் ஏதோ கூற முயல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
















