ஆந்திராவில் இருந்து ரயில் மார்க்கமாக உரிய ஆவணங்கள் இன்றி 70 லட்சம் ரூபாய் ரொக்கம், 108 கிராம் தங்கம் மற்றும் ஒரு கிலோ வெள்ளியை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சூளூர்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த 4 பேரின் பைகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















