தைப்பூச தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் என அகில பாரத இந்து மகா சபை தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் பெரி செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர்நீத்த பூரண சந்திரனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரி செந்தில், இந்து மகா சபா என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும் தங்களது அமைப்பு தான் உண்மையானது என்றும், மற்ற அமைப்புகள்மீது அரசிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், சாலையோரங்களில் உள்ள மாட்டிறைச்சி கடைகளால் விபத்து ஏற்படுவதாகக் கூறிய அவர், மாட்டிறைச்சி கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
















