இந்துக்களின் ஆன்மிக தலங்களை இழிவுபடுத்தும் திராவிட மாடல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர தமிழக மக்கள் பெரியளவில் விழிப்புணர்வு அடைய வேண்டும் எனப் பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் அருகே பாஜக மற்றும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வாலாஜா நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்காமல், அடுத்த 4 மாதங்களில் மக்களின் வரிப்பணத்தை எப்படி கொள்ளையடிக்கலாம் என்ற சிந்தனையோடு நகராட்சி நிர்வாகம் செயல்படுகிறது எனக் குற்றம்சாட்டினார்.
நகராட்சியில் உள்ள குறைபாடுகளை 20 நாட்களுக்குள் சரி செய்யாவிட்டால் நகர்மன்ற தலைவரின் வீட்டினை முற்றுகையிட்டு பாஜக மற்றும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
















