மத்திய அரசின் முத்ரா திட்டம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாத திமுக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது எனப் பாஜக மாநில நிர்வாகி ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பாஜக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கட்சியின் அமைப்பு சாரா தொழில்பிரிவின் மாநில அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமைப்பு சாரா தொழிலாளர்களின் வளர்ச்சிக்காகப் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், இந்தத் திட்டங்கள்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத் திமுக அரசு மறுப்பதாகவும் தெரிவித்தார்.
















