வங்கதேசத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இளைஞர்களின் முக்கிய தலைவராக இருந்த ஷரீப் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதை தொடர்ந்து, வங்கதேசம் முழுவதும் வன்முறைகளும், கிளர்ச்சிகளும் வெடித்துள்ளன. குறிப்பாகச் சட்டோகிராம் பகுதியில் உள்ள இந்திய உதவி ஆணையரின் இல்லத்தில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து டாக்கா, குல்னா, ராஜ்சாகி ஆகிய இடங்களில் உள்ள இந்திய விசா மையங்கள் மூடப்பட்டன. பின்னர் நிலைமை சற்று சீரானதை தொடர்ந்து டாக்காவில் உள்ள விசா மையம் மீண்டும் திறக்கப்பட்டது.
இந்நிலையில், சிட்டகாங் நகரில் இந்திய விசா விண்ணப்ப சேவைகள் காலவரையின்றி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை விசா விண்ணப்ப சேவைகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















