காஷ்மீரில் சில்லய் கலான் எனும் பனிப்பொழிவு காலம் தொடங்கியதையடுத்து முக்கிய சாலைகள் மூடப்பட்டன.
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக பதிவானது. அத்துடன் பாரமுல்லா, குல்மாா்க், சோனாமாா்க்கில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
இது 40 நாட்கள் கடுமையான குளிர் நிலவும் சில்லய் கலானின் தொடக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பனிப்பொழிவின் காரணமாக முக்கிய சாலைகள் வழுக்கும் தன்மையுடையதாக மாறின. இதனால் பல முக்கிய பாதைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
















