இந்தியா ஒரு இந்து நாடு, அதை ஏற்க அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட மோகன் பாகவத், நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சூரியன் கிழக்கில் உதிப்பதற்கு அரசியலமைப்பு எப்படி தேவையில்லையோ, அதேபோல இந்தியா ஒரு இந்து நாடு என்பதை ஏற்கவும் அரசியலமைப்பு ஒப்புதல் தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இந்தியாவை தாய்நாடாகக் கருதுபவர்கள், அதன் கலாசாரத்தை பாராட்டுகிறார்கள் எனக் குறிப்பிட்ட மோகன் பாகவத், மூதாதையர்களின் மகிமையை நம்பும் மற்றும் போற்றும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து நாடு தான் எனக் கூறினார்.
















