சிவகாசி அருகே குடும்ப பிரச்னையில் மனைவி மற்றும் பிள்ளைகள் மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகர் காவல் நிலையம் பகுதியில் அக்பர் அலி என்பவர் மனைவி, மகன்கள் மற்றும் மாமியாருடன் வசித்து வருகிறார்.
மனைவி செய்யது அலி பாத்திமாவுக்கும் அக்பர் அலிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, இரவு மீண்டும் தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்ட நிலையில், மனைவி செய்யது அலி பாத்திமா, மகன்கள் பர்வீன், பாருக் மற்றும் மாமியார் சிக்கந்தர் மீது அக்பர் அலி பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். அப்போது, அக்பர் அலி மீதும் தீப்பற்றியுள்ளது.
குடும்பத்தினர் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















