சீனாவின் உள் மங்கோலியாவில் கலாசாரத்தின் அடையாளமாகத் திகழும் நாடம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
மங்கோலிய மக்களின் பாரம்பரியம், வீரம் மற்றும் கலாசாரத்தைப் பறைசாற்றும் விதமாக நாடம் திருவிழா ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கொண்டாடப்படும்.
அந்தவகையில், சீனாவின் உள் மங்கோலியாவில் உள்ள ஹுலுன்புய்ர் பகுதியில் இவ்விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இதில், உறைபனியில் மங்கோலிய வீரர்கள் தங்களின் உடல் வலிமையை நிரூபிக்கும் மல்யுத்தப் போட்டியும், பனிப்புழுதி பறக்க, அதிவேகமாக ஓடும் குதிரை பந்தயம், ஒட்டக பந்தயம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும்.
இதில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு நடனமாடியும், பனிச்சறுக்கு, பனிச் சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய மங்கோலிய உணவுகளை ருசித்தபடியும் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.
















