கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் புலி சுற்றி திரிவதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
சுற்றுலா தளமான கொடைக்கானலில் வனவிலங்குகள் அடிக்கடி உணவு தேடி சாலையில் உலா வருகின்றனர்.
கடந்த சில வாரம் பேரிஜம் வனப்பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று சாலையில் 10 அடி தூரத்தை ஒரே நேரத்தில் பாய்ந்து சென்ற வீடியோ வெளியானது.
இந்நிலையில் தற்போது பேரிஜம் அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் சாலையில் புலி ஒன்று நடந்து சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதனால் கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
















