ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈஞ்சம்பள்ளியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வரும் ஜெயந்தி என்பவர், அங்குக் கிராம உதவியாளராகப் பணிபுரிந்து வரும் கனிமொழி என்பவரை அலுவலகத்திற்குள் அமர்ந்து பணி செய்யக் கூடாது எனக் கூறியதாகத் தெரிகிறது.
இதுகுறித்து அவர் வட்டாட்சியரிடம் புகார் அளித்தும் விஏஓ மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கிராம உதவியாளருக்கு அருகில் உள்ள புஞ்சை காளமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பணி மாறுதலை ரத்து செய்யக்கோரியும், விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் மொடக்குறிச்சி தாலுக்கா அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















