அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள கால்வெஸ்டனுக்கு அருகே ஏழு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய மெக்சிகோ கடற்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், டெக்சாஸ் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூடுபனியின் காரணமாக விபத்து நிகழ்ந்ததா எனும் கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
















