யோகா குரு பாபா ராம்தேவ் பத்திரிகையாளருடன் மல்யுத்தம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
யோகா குரு பாபா ராம்தேவ் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்வில் பங்கேற்றார்.
அப்போது ஜெய்தீப் கர்னிக் என்ற நிகழ்ச்சியின் நெறியாளர் தன்னுடன் மல்யுத்தத்திற்கு வரும்படி ராம்தேவ் சவால் விடுத்தார்.
ஜெய்தீப் கர்னிக் சவாலை ஏற்று பாபா ராம்தேவ்வுடன் மோதினார். போட்டியின் தொடக்கத்தில் பாபா ராம்தேவ் ஆதிக்கம் செலுத்தினாலும், திடீரென அதிரடி காட்டிய ஜெய்தீப் கர்னிக் போட்டியில் வெற்றி பெற்றார்.
பின்னர் சிரித்தபடியே எழுந்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். இதன் வீடியோ வைரலாகி வருகிறது.
















