இமாச்சலப்பிரதேச மாநிலம், ஷிம்லாவில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை மருத்துவர் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ஷிம்லா மாவட்டத்தின் குப்வி பகுதியைச் சேர்ந்த நோயாளி ஒருவர், சுவாச கோளாறு காரணமாக ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அப்போது அங்குப் பணியில் இருந்த மருத்துவரிடம், தனது உடல்நிலை குறித்து நோயாளி விளக்கியுள்ளார். அந்தச் சமயத்தில் மருத்துவர் மிகவும் அநாகரீகமாகப் பேசியதாகத் தெரிகிறது.
இதனைத் தட்டிக்கேட்ட நோயாளி, மரியாதையாகப் பேசுங்கள் என மருத்துவரைக் கடிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், நோயாளியைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
















