வைகுண்ட ஏகாதசியை ஒட்டிச் சேலத்தில் உள்ள கோட்டை பெருமாள் கோயிலில் சட்டத்தை மீறிப் பணம் வசூலிக்கப்படுவதாக இந்து முன்னணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோட்டை பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது.
இங்குச் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பெருமாளின் புகைப்படம் கூடிய காலண்டர்கள் விற்கப்படுவதாகவும் இந்து முன்னணியினர் குற்றம்சாட்டினர்.
மேலும் சீர்வரிசை தட்டுகளுக்கும் ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது, அதன் பேரில் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் பணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்தனர்.
















