தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு சென்னை விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் ஒருநாள் பயணமாகச் சென்னைக்கு வருகை தந்தார்.
விமான நிலையத்திற்கு வந்த அவரை மத்திய அமைச்சர் எல்.முருகன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
அதனைத்தொடர்ந்து, பியூஸ் கோயல் முகம் பதித்த பதாகை ஏந்திக்கொண்டு அவருக்குப் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
















