ஆரவல்லி மலைக்கு ஆபத்தா? - மத்திய அரசு கூறுவது என்ன?
Jan 14, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆரவல்லி மலைக்கு ஆபத்தா? – மத்திய அரசு கூறுவது என்ன?

Murugesan M by Murugesan M
Dec 23, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரவல்லி மலைத்தொடர் குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறைக்குச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த அதிருப்திக்கு காரணம் என்ன? இதுகுறித்து மத்திய அரசு என்ன கூறுகிறது?.. பார்க்கலாம், இந்தச் செய்தி தொகுப்பில்.

உலகின் மிகவும் பழமையான மடிப்பு மலைத்தொடர்களில் ஒன்று, ஆரவல்லி மலை. இது இமயமலையை விடவும் பழமையானது. வடமேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் சுமார் 800 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த மலைத்தொடர் நீண்டுள்ளது. பனாஸ், லூனி, சாகர்மதி போன்ற பல நதிகளின் பிறப்பிடமாகத் திகழும் இந்த மலை, தாமிரம், துத்தநாகம், ஈயம், பளிங்கு கற்கள் போன்ற பல வளங்களையும் கொண்டுள்ளது.

தார் பாலைவனம் கிழக்கு நோக்கிப் பரவாமல் தடுப்பதும் இந்த ஆரவல்லி மலைதான். அத்துடன், காற்று மாசுப்பாட்டை கட்டுப்படுத்துவதிலும், நிலத்தடி நீரை பெருமளவில் சேமிப்பதிலும் இந்த மலை முக்கிய பங்காற்றுகிறது. இத்தனை சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதால் ஆரவல்லி மலைத்தொடர், வடஇந்தியாவின் பச்சை கவசம் என வர்ணிக்கப்படுகிறது. இந்த மலைகுறித்து அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த வரையறை தற்போது முக்கிய பேசுப்பொருளாகியுள்ளது.

100 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள மலைகள் மட்டும்தான் ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும் எனக் கடந்த மாதம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இது சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஆரவல்லி மலைத்தொடரில் 100 மீட்டர் உயரத்திற்கும் குறைவான பல பகுதிகள் உள்ளன. புதிய வரையறை காரணமாக அவை சாதாரண மலைகளாகக் கருதப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

உயரம் குறைந்த பகுதிகளுக்கான பாதுகாப்பு விலக்கிகொள்ளப்படும் பட்சத்தில், அங்கு அதிகளவில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு கனிமவளங்கள் கண்மூடித்தனமாக வெட்டி எடுக்கப்படும் அபாயம் உருவாகும் எனச் சுற்றுசூழல் செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் அங்கு வேகமெடுக்க தொடங்கிவிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கின்றனர். அவ்வாறு நிகழ்ந்தால், அங்கு வாழும் அரியவகை உயிரினங்கள் இறக்கும் சூழல் உருவாவதுடன், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் Aravalli Bachao அமைப்பைச் சேர்ந்தவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சந்திரமௌலி பாசு, இது ஒரு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் எனக் கூறியுள்ளார். அத்துடன், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகள் இனி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, #SaveAravalli என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த அச்சங்கள் தேவையற்றவை என மத்​திய சுற்​றுச்​சூழல் துறை அமைச்​சர் பூபேந்​திர யாதவ் தெரிவித்துள்ளார். ஆர​வல்லி மலைத்​தொடரில் 90% பாது​காக்​கப்​பட்​ட பகுதிகள்தான் எனவும், விரி​வான மேலாண்மை திட்​டம் இறுதி செய்​யப்​படும் வரை புதிய சுரங்க ஒப்பந்தங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதே சமயம், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரின் கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, ஆர​வல்லி மலை தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.

Tags: லூனிசாகர்மதிமத்திய அரசுIs the Aravalli Mountains in danger? - What does the central government say?ஆரவல்லி மலைபனாஸ்
ShareTweetSendShare
Previous Post

பொய் புகாரால் பலியான இந்து இளைஞர் – விசாரணையில் பகீர் தகவல்!

Next Post

இந்துக்களுக்கு எதிரான வன்முறை : பாக்.கின் பகடை காயாக மாறிய வங்கதேசம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies