தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக – பாஜக இடையே நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக அதிமுக மற்றும் பாஜக இடையே சென்னை லீலா பேலசில் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தேசியச் செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோரும், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் உடனிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளதாகப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















