100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிராக திமுக நடத்திய போராட்டத்திற்கு, பணம் கொடுத்து ஆள் திரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையம் எதிரே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிராக திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தன்னார்வமாக பொதுமக்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில், திமுகவினர் பணத்தை கொடுத்து ஆட்களை திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள் பலர், எதற்காக ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்பதே தெரியாமல் நின்றிருந்த காட்சிகள், காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
















