டெல்லி செங்கோட்டை பயங்கரவாத கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை எதிரே கடந்த நவம்பர் 10-ம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டதோடு, 30 பேர் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களின் நீதிமன்ற காவலை ஜனவரி 8-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
















