திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவிற்கு செல்வதற்காக வேலூர் இப்ராஹிம் வருகை தந்தார். ஆனால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார், தர்காவிற்கு செல்ல அனுமதி மறுத்தனர். பூர்ண சந்திரனின் ஆன்மா சாந்தி அடைய வழிபட செல்வதாக தெரிவித்தும் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது
தர்காவிற்கு செல்ல அனுமதி வழங்கப்படாதால் வேலூர் இப்ராஹிம் தர்ணாவில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பொதுமக்களும், பாஜகவிரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் முருகன் பாடல்களை பாடினர்.
தர்ணா போராட்டத்திற்கு இடையே பொதுமக்களுடன் இணைந்து பாஜகவினர் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.
இறுதியாக போராட்டத்தில் ஈடுபட்ட வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
















