கோவையில் கருஞ்சிறுத்தை குட்டியின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
மருதமலை அடிவார பகுதியில் இருந்த குகையில் கருஞ்சிறுத்தை குட்டி மட்டும் இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதனைதொடர்ந்து குட்டியை தாயுடன் சேர்க்கும் பணி ஈடுபட்டு வந்தனர். ஆனால், சில மணி நேரம் கழித்து பார்த்தபோது சிறுத்தை குட்டி காணாமல் போயிருந்தது.
இதன் காரணமாக உடனடியாக இரண்டு குழுக்கள் வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டன. அப்போது குகையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் சிறுத்தை குட்டி உயிரிழந்து கிடந்தது.
சிறுத்தை குட்டியின் இறப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















