முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூற்றாண்டு நிறைவு தினத்தை ஒட்டி, விருதுநகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தில் நூறு அகல் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது.
இதனைதொடர்ந்து கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில், வாஜ்பாயின் உருவப்படத்திற்கு பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வரும் மகளிருக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில், பாஜக வர்த்தகப்பிரிவின் மாநில செயலாளர் காமாட்சி, மகளிர் அணியைச் சார்ந்த காளீஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















