தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால், 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மார்கழி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாரதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளதால் 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் கடற்கரையில் புனித நீராடிய ஏராளமான பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி, வழிபாடு மேற்கொண்டனர்.
















