நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் இன்று முதல் அமல்!
Oct 28, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் இன்று முதல் அமல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 06:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடு முழுவதும் திருத்தப்பட்ட புதிய ரயில் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

நாடு முழுதும் உள்ள 19 மண்டலங்களில், 12 ஆயிரத்து 617 பயணியர் ரயில்கள், 11 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 2 கோடியே 40 லட்சம் பேர் ரயில்களில் பயணம் செய்கின்றனர்.

இந்நிலையில் ரயில்வே ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், சிறிய அளவில் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, 215 கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் செல்வோருக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சாதாரண வகுப்பில் 215 கிலோ மீட்டர் வரை பயணம் செய்வோருக்கு கட்டண உயர்வு இல்லை என்றும் அதற்கு மேல் பயணம் செய்தால், கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 216 கிலோ மீட்டர் முதல் 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 751 கிலோ மீட்டர் முதல் ஆயிரத்து 250 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 251 கிலோ மீட்டர் முதல் ஆயிரத்து 750 கிலோ மீட்டர் வரையிலான பயணத்திற்கு 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆயிரத்து 751 கிலோ மீட்டருக்கு மேல் 20 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் பயணம் செய்வோருக்கு, கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் புறநகர் மின்சார ரயில் கட்டணம், சீசன் கட்டணம், நடைமேடை கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags: new train faresபுதிய ரயில் கட்டணம் இன்று முதல் அமல்railway employeesrailway price hike
Share
Tweet
SendShare
Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் – 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

Next Post

ஆழிப்பேரலை 21-வது நினைவு தினம் – பல உயிர்களை காவு வாங்கிய சுனாமி அலைகள்!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies