திமுக அரசு மக்களை தேர்தல் நேரத்தில் ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய்’யின் 100 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை தி நகரில் உள்ள கமலாலயத்தில் அவரது திருவுருவ படத்திற்கு பாஜக மூத்த தலைவர் H ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாநில துணைத் தலைவர் VP துரைசாமி, மாநில செயலாளர் அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் இதில் பங்கேற்று, வாஜ்பாய் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, தமிழகத்தில் அமைக்கப்படும் பூங்காக்களுக்கு வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சிக்கு வந்து செய்த முதல் ஊழல் தூய்மை பணியாளர்கள் ஊழல் என்றார். திமுக மக்களை தேர்தல் நேரத்தில் ஏமாற்ற முயல்வது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் டாஸ்மாக் வருமனம் ரூ.56,000 கோடி; ஆனால் மாநிலத்தின் கடன் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசு நிதி கொடுத்தாலும் அதனை மாநில அரசு முறையாக பயன்படுத்துவதில்லை என்றும் அவர் சாடினானர்.
















